கடலில் ஏன் முதலைகள் இருப்பதில்லை? | Objective GK

கடலில் ஏன் முதலைகள் இருப்பதில்லை?

அது எப்படி இல்லாமல் போகும். கடலிலும் முதலைகள் வசிக்கின்றன. குறிப்பிட்ட‌ சில‌ வகை முதலைகளே கடலில் வசிக்கும். பெரும்பாலும் முதலைகள் கடற்கரை அல்லது கடற்கரையிலிருந்து கடலுக்குள் சில மைல் தொலைவில் வசிக்கும்.

ஆனால் நடுக்கடலில் வசிப்பது என்பது அரிது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியாவை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் முதலைகள் வசிக்கின்றன. இவை எப்போதாவது கடலுக்குள் ஒரு 550–600 கி.மீ. தூரம் வரை சென்று வரும். கடலில் வாழும் முதலைகளுக்கும்
நாம் சாதாரணமாக பார்க்கும் முதலைகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

கடல் முதலைகள் சாதாரண முதலைகளை விட அளவிலும் எடையிலும் அதிகமாக, உருவத்திலும் பெரியதாகவும் இருக்கும். இவை எப்போதும் நீரில் இருக்காது. அதன் உடலுக்கும் குறிப்பிட்ட அளவு வெப்பம் தேவைப்படுவதால், இவை தேவைப்படும்போது கடற்கரைப் பகுதிக்கு வந்து மணற்பரப்பில் சிறிது நேரம் தங்கி உடலை வெப்பப்படுத்திவிட்டு மீண்டும் கடலுக்குள் செல்லும். ஆறு குளங்களில் வசிப்பவை போன்றே கடலிலும் முதலைகள் வசிக்கின்றன.