ஆமாம். திமிங்கிலங்கள் செங்குத்தாக உறங்கும். அனைத்து வகை திமிங்கலங்களும் அவ்வாறு செய்வதில்லை. ஸ்பேர்ம் திமிங்கலங்கள் (sperm whales) மட்டுமே இவ்வாறு செய்கின்றன. ஆனால் டால்பின்கள் மற்றும் பிற பல் திமிங்கலங்கள் இவ்வாறு தூங்குவதில்லை. உறங்குவதற்கு முன், ஸ்பேர்ம் திமிங்கலங்கள் தங்கள் உடல் நீளத்திற்கு பல மடங்கு டைவ் செய்து, பின்னர் தலையை உயர்த்தி, தூங்கச் சென்று, மெதுவாக மேற்பரப்பை நோக்கி நகர்கின்றன. இச்செய்கையின் போது 10 முதல் 15 நிமிட தூக்கத்தைப் பெறுகின்றன.
இவ்வாறு திமிங்கிலங்கள் உறங்கும் என்பது கடந்த 2008ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு உறங்கும்போது அவை அசையாமல் இருப்பது தான் கூடுதல் ஆச்சர்யம். அந்த நேரத்தில் சுவாசப் பரிமாற்றத்தைக் கூட செய்யாது என்பர். அதன் மொத்த உறக்க நேரத்தில் 7% நேரம் இவ்வாறு செங்குத்தாக உறங்கும்.