நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 20-10-2017 | Objective GK

நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 20-10-2017

நாள்: 
Friday, October 20, 2017
  • உலகம்நியூசிலாந்து பிரதமராக ஜெசிந்தா தேர்வு. நியூசிலாந்து நாட்டின் பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டர்ன்(37) பதவியேற்க உள்ளார். ஜெசிந்தா நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராகிறார்.
  • இந்தியாரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள் போன்ற‌ பொது இடங்களில் உள்ள‌ இலவச 'வைபை' பயன்படுத்தினால், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக மத்திய அரசின் இந்திய கணிப்பொறி அவசர கால மீட்பு குழு எச்சரித்துள்ளது.
  • இந்தியாஅக்., 20ல் உலக விமான போக்குவரத்து கட்டுப்பாடு தினம் கடைபிடிக்கப்படுகிறது
  • இந்தியாஇந்திய - சீன போரின் 55வது ஆண்டு நினைவு தினம் இன்று (அக். 20) கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்தியா தீபாவளியையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சரயு நதி ஆரத்தி விழாவில், 1.87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த தீபமேற்றும் விழா, 'கின்னஸ்' உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதாக, அறிவிக்கப்பட்டது.
  • இந்தியா இந்தியாவில் சிகிச்சை பெற, பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ, 'விசா' வழங்கி, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.