விமானத்தில் செல்லும் போது ஏன் பேனா பயன்படுத்தக்கூடாது? | Objective GK

விமானத்தில் செல்லும் போது ஏன் பேனா பயன்படுத்தக்கூடாது?

விமானங்களில் பேனாக்கள் பயன்படுத்த அனுமதியில்லை. குறிப்பாக மை நிரப்பி எழுதப்படும் பேனாக்கள்! அதாவது, பவுண்டன் பேனா (Fountain / Ink Pen). இதற்குக் காரணம், விமானம் மேல் எழும்பும்போதும் கீழே இறங்கும்போதும் வளிமண்டல அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும்.

உங்கள் பவுண்டன் பேனாவில் ink cartridge உள்ளது; மையைத் தவிர, அதன் உள்ளே காற்றும் உள்ளது. காற்றில் பறக்கும்போது, ​​கேபினுக்குள் அழுத்தம் குறைவாக இருப்பதால் பேனாவின் உள்ளே உள்ள‌ காற்று விரிவடைந்து விடும், விரிவடையும் காற்று மையினை வெளியே தள்ளும். அகையினால் மை பொங்கி இறுதியில் வடிந்துவிடும்.அவ்வாறு ஏற்பட்டால் அருகில் இருக்கும் நபர் மற்றும் இதர‌ பொருட்களின் மீது மை படிந்துவிடும்.

இந்த வளிமண்டல அழுத்தத்தில் உள்ள அழுத்த ஏற்ற இறக்க மாறுபாட்டால் பேனா மை வடியும் என்பதால் பேனாக்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.