உதாரணமாக : நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் "வாழ்த்துக்கள்" என்ற வார்த்தையை டைப் செய்யும் போது ஏற்கனவே இவ்வார்த்தையை தட்டச்சு செய்திருந்ததால் கூகுள் தயாராக எடுத்து வைத்துத் தரும். சில பரிந்துரைகளையும் கூடவே தரும்.
இவ்வாறு நாம் ஒரு வார்த்தையை புதிதாக பயன்படுத்தும்போது அதை பத்திரமாக சேமித்து வைத்து பிற்காலத்தில் அதை எடுத்துக் கொடுப்பதுதான் cache. இது தற்போது பெரும்பாலும் அனைத்து மின்னணு கருவிகளிலும் வந்துவிட்டது.
முதலில் கணினியில் இருந்தது. பின் மொபைல் மற்றும் பிற சாதனங்களிலும் வந்துவிட்டது.
இவ்வாறு நாம் ஏற்கனவே பயன்படுத்தியதை மீண்டும் மெனக்கெட்டு பயன்படுத்துவதற்கு பதில் அதை பத்திரமாக பதிவு செய்து மின்னணு சாதனங்கள் வழங்கும். அப்படி பத்திரமாக சேமித்து வைக்கும் இடம்/முறைதான் cache.