இந்தியாவின் நதியோர நகரங்கள்

இந்திய மக்கள் வாழ்க்கையில் நதிகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன‌. அவை நாடு முழுவதுமாக‌ பெருமளவிலான மக்களுக்கு குடிநீர், மலிவான போக்குவரத்து, மின்சாரம் மற்றும் வாழ்வாதாரங்களை வழங்குகின்றன. மேலும், ஆறுகள் ஓடிகின்ற‌ நிலமானது வளமிக்கதாக‌ இருப்பதால், பல விவசாய பயிகளுக்கும் வள‌ம் சேர்க்கின்றன‌. இதன் விளைவாக, பெரும்பான்மையான‌ இந்திய முக்கிய நகரங்களும், நதிகளின் கரையில் அமைந்துள்ளன.

இந்தியாவின் நதியோர நகரங்கள்

நகரம் நதி மாநிலம்
புது தில்லி யமுனா தில்லி
ஸ்ரீநகர் ஜீலம் ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஃபெரோஸ்ப்பூர் சட்லெஜ் பஞ்சாப்
அகமதாபாத் சபர்மதி குஜராத்
சூரத் தாபி குஜராத்
வதோதரா விஸ்வாமித்ரி, மஹி, நர்மதா குஜராத்
பாருச்சில் நர்மதா குஜராத்
கோட்டா சம்பல் ராஜஸ்தான்
ரிஷிகேஷ் கங்கை உத்தரகண்ட்
ஹரித்வார் கங்கை உத்தரகண்ட்
பத்ரிநாத் அலக்நந்தா உத்தரகண்ட்
அலகாபாத் கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடம் உத்திரப்பிரதேசம்
கான்பூர் கங்கை உத்திரப்பிரதேசம்
கான்பூர் கண்டோன்மென்ட் கங்கை உத்திரப்பிரதேசம்
வாரணாசி கங்கை உத்திரப்பிரதேசம்
மிர்சாபூர் கங்கை உத்திரப்பிரதேசம்
பார்ருகாபட் கங்கை உத்திரப்பிரதேசம்
கன்னோஜ் கங்கை உத்திரப்பிரதேசம்
ஷுக்லாகஞ் கங்கை உத்திரப்பிரதேசம்
சாகேறி கங்கை உத்திரப்பிரதேசம்
மதுராவில் யமுனா உத்திரப்பிரதேசம்
ஆக்ரா யமுனா உத்திரப்பிரதேசம்
ஜான்பூர் கோம்தி உத்திரப்பிரதேசம்
லக்னோ கோம்தி உத்திரப்பிரதேசம்
அயோத்தி சரயு உத்திரப்பிரதேசம்
கோரக்பூர் ரப்தி உத்திரப்பிரதேசம்
பாகல்பூர் கங்கை பீகார்
பாட்னா கங்கை பீகார்
ஹாஜிபூர் கங்கை பீகார்
கயா ஃபால்கோ (நீரஞ்சனா) பீகார்
குவாலியர் சம்பல் மத்தியப் பிரதேசம்
உஜ்ஜைன் ஷிப்ரா மத்தியப் பிரதேசம்
அஷ்ட பர்வாடி மத்தியப் பிரதேசம்
ஜபல்பூர் நர்மதா மத்தியப் பிரதேசம்
கொல்கத்தா ஹூக்ளி மேற்கு வங்கம்
கட்டாக் மஹாநதி ஒடிசா
சம்பல்பூர் மஹாநதி ஒடிசா
ரூர்கேலா ப்ரஹ்மானி ஒடிசா
ஹைதெராபாத் முசி தெலுங்கானா
நிஜாமாபாத் கோதாவரி தெலுங்கானா
ராஜமுந்திரி கோதாவரி ஆந்திரப் பிரதேசம்
கர்னூல் துங்கபத்ரா ஆந்திரப் பிரதேசம்
விஜயவாடா கிருஷ்ணா ஆந்திரப் பிரதேசம்
நெல்லூர் பென்னாறு ஆந்திரப் பிரதேசம்
பெங்களூர் விருட்சபவதி கர்நாடகம்
மங்களூர் நேத்ராவதி, குருபுரா கர்நாடகம்
ஷிமோகா துங்கா நதி கர்நாடகம்
பாட்ராவாதி பத்ரா கர்நாடகம்
ஹோஸ்பெட் துங்கபத்ரா கர்நாடகம்
கார்வார் காளி கர்நாடகம்
பாகல்கோட் கடப்ரபா கர்நாடகம்
ஹொன்னவர் ஷராவதி கர்நாடகம்
நாசிக் கோதாவரி மகாராஷ்டிரா
நந்தீத் கோதாவரி மகாராஷ்டிரா
சாங்க்லி கிருஷ்ணா மகாராஷ்டிரா
புனே முலா, முத்தா மகாராஷ்டிரா
கர்ஜத் உல்ஹாஸ் மகாராஷ்டிரா
மஹத் சாவித்ரி மகாராஷ்டிரா
கோலாப்பூர் பஞ்சகங்கா மகாராஷ்டிரா
மாலேகான் கிர்னா நதி மகாராஷ்டிரா
திருச்சிராப்பள்ளி காவேரி தமிழ்நாடு
ஈரோடு காவேரி தமிழ்நாடு
சென்னை கூவம், அடையாறு தமிழ்நாடு
மதுரை வைகை தமிழ்நாடு
கோயம்புத்தூர் நொய்யல் தமிழ்நாடு
திருநெல்வேலி தாமிரபரணியாறு தமிழ்நாடு
கோட்டயம் மீனாச்சில் கேரளா
திப்ருகார் பிரம்மபுத்திரா அசாம்
குவஹாத்தி பிரம்மபுத்திரா அசாம்
டாமன் டாமன் கங்கா நதி டாமன்