இந்தியாவின் விண்வெளி மையங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மை விண்வெளி முகமை ஆகும். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது. இஸ்ரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது.

இந்தியாவின் விண்வெளி மையங்கள்

விண்வெளி மையம் அமைவிடம்
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் அகமதாபாத்
குறைகடத்தி ஆய்வகம் சண்டிகர்
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் சித்தூர்
விண்வெளி பயன்முறை மையம் அகமதாபாத்
வட கிழக்கு விண்வெளி பயன்முறை மையம் சில்லாங்
சோதனை மையங்கள் அமைவிடம்
திரவ உந்துகை அமைப்பு மையம் பெங்களூரு , வலியமலா ( திருவனந்தபுரம் ), மற்றும் மகேந்திரகிரி ( திருநெல்வேலி மாவட்டம் )
கட்டமைப்பு மற்றும் ஏவல் மையங்கள் அமைவிடம்
இஸ்ரோ செயற்கைகோள் மையம் பெங்களூரு
மின் - ஒளியியலான அமைப்புகளுக்கான ஆய்வகம் -LEOS பெங்களூரு
சதீஸ் தவான் விண்வெளி மையம் ஸ்ரீஹரிக்கோட்டா
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திருவனந்தபுரம்
தும்பா நிலநடுக்கோட்டு விறிசு ஏற்றுகை நிலையம் திருவனந்தபுரம்
சுவடு தொடரல் மற்றும் கட்டளை மையங்கள்(Tracking and control facilities) அமைவிடம்
இந்திய ஆழ் விண்வெளி பிணையம்
Indian Deep Space Network ( (IDSN)
பெங்களூரு
தேசிய தொலையுணர்வு மையம் ஐதராபாத்
இஸ்ரோ தொலைப்பதிவு , சுவடுதொடரல் மற்றும் கட்டளை பிணையம் (ISRO Telemetry, Tracking and Command Network) பெங்களூரு ( தலைமையகம் ) மற்றும் இந்தியாவிலும் உலகெங்கும் பல தரை நிலையங்கள் .
தலைமைக் கட்டுப்பாட்டு மையம் கர்நாடகம்
மனிதவள மேம்பாடு மையம் அமைவிடம்
இந்திய தொலையுணர்வுக் கழகம் (IIRS) தேராதூன்
இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் (IIST) திருவனந்தபுரம்
மேம்படுத்தல் மற்றும் கல்விக்கான தொடர்பியல் பிரிவு அகமதாபாத்