நிகழ்வுகள் : நவம்பர் 20, 2018

தேசிய செய்திகள்

கோவா

  • இந்தியாவின் 49 வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவா பனாஜி நகரில் தொடங்கியது.

தமிழ்நாடு

  • மாநிலத்தில் பதினோரு கடலோர மற்றும் உள் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை அறிவித்தார்.

திரிபுரா

  • திரிபுராவின் அகர்தலாவில் “7 வது சர்வதேச சுற்றுலா மார்ட்” 2018 ஆம் ஆண்டு நவம்பர் 22 முதல் 24 ஆம் தேதி வரை மாநில சுற்றுலாத் துறை, திரிபுரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைந்து, இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.

சர்வதேச செய்திகள்

  • மாலத்தீவு அமைச்சரவை 53 நாடுகளின் குழுவில் இருந்து வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காமன்வெல்த் குழுவில் மீண்டும் இணைவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • குவாத்தமாலாவில், ஃபூகோ எரிமலை இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக வெடித்தது , மலைப்பகுதியில் எரிமலைக்குழம்பு மற்றும் சாம்பலை மிகுந்த அளவு வெளித்தள்ளியது.
  • பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே ப்ரூசெல்லுடனான தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் தனது வரைவு பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான பெருவணிகத்தின் ஆதரவை வென்றார்.

வணிகம் & பொருளாதாரம்

  • மத்திய வங்கியுடன் ரூ. 9.69 லட்சம் கோடி உபரி மூலதனத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு உயர்-ஆற்றல் குழு ஒன்றை அமைக்க ஆர்.பி.ஐ. குழு முடிவு செய்துள்ளது.
  • இந்தியாவின் பிரதம மந்திரி அடையாளம் காணக்கூடிய ஏழு வணிக பிரச்சனைகளை தொழிநுட்பங்களை பயன்படுத்தி தீர்ப்பதற்கான பெரும் சவால் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
  • தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க இளம் இந்தியர்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களின் திறனைத் தூண்டுவதே இந்த சவாலின் நோக்கமாகும்.

மாநாடுகள்

  • காலநிலை மாற்றத்திற்கான 27 வது BASIC ஆலோசனைக் கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான டெல்லியில் நடத்தப்பட்டது..
  • BASIC (பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா) நாடுகள், புது தில்லியில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • உள்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் கிரன் ரிஜிஜூ புது தில்லியில், ‘பேரழிவு மேலாண்மையில் ஊடகத்துறைக்கான பங்கு’ பற்றிய ஓர்க்ஷாப்பைத் திறந்து வைத்தார்.தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(NDMA), இந்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM), ஆகியவையால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

திட்டங்கள்

  • உத்திரப்பிரதேசத்தில், நரி சஷக்திகரன் சங்கல்ப் திட்டம் அல்லது மகளிர் அதிகாரமளித்தல் பிரச்சாரம் லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களால் தொடங்கப்பட உள்ளது.ஒரு மாதக் காலம் நடைபெறும் பிரச்சாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 9 வது சி.ஜி.டி. ஏலத் திட்டத்தின் கீழ் 129 மாவட்டங்களில் 65 புவியியல் பகுதிகள் (GAs) உள்ள நகர் எரிவாயு விநியோகத் திட்டத்திற்கான (CGD) அடிக்கல் நாட்டு விழா பிரதமரால் அமைக்கப்படும்.

ஒப்பந்தங்கள் & ஒப்புதல்

  • ஜார்க்கண்ட் குடிமக்களுக்கு நம்பகமான, தரம் வாய்ந்த மற்றும் மலிவு 24×7 மின்சாரம் வழங்க ஜார்க்கண்ட் பவர் சிஸ்டம் மேம்பாட்டு திட்டத்திற்கான 310 மில்லியன் டாலருக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்திய அரசு மற்றும் உலக வங்கிக்கு இடையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பங்கதம் கையெழுத்தானது.

பாதுகாப்பு செய்திகள்

  • இராணுவ தளபதிகளின் தலைவரான பிபின் ராவத் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.