தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 15-10-2018

நாள்: 
Monday, October 15, 2018
 • உலகம் ஜகார்தா சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு உலக வங்கி, ரூ. 7,368 கோடி கடன் வழங்குவதாக அறிவிப்பு.
 • இந்தியா உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரத்தின் பெயர், பிரயாக்ராஜ் என, மாற்றப்பட உள்ளதாக அறிவிப்பு. 2019 ஜனவரியில் நடக்கவுள்ள கும்பமேளாவுக்கு முன், அலகாபாதின் பெயர், பிரயாக்ராஜ் என மாற்றப்படும் என்று அம்மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேந்தவருமான, யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 29-09-2018

நாள்: 
Saturday, September 29, 2018
 • உலகம் துபாய் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. துபாயில் நடந்த பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின‌. பரபரப்பான பைனலில் வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 222 ரன்னுக்கு ஆல் அவுட். இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 223 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
 • உலகம் துபாய் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. துபாயில் நடந்த பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின‌. பரபரப்பான பைனலில் வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 222 ரன்னுக்கு ஆல் அவுட். இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 223 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
 • இந்தோனேஷியா28 ஆம் தியதி, இந்தோனேஷியாவின் மத்தியில் உள்ள சுலவேசி பகுதியில் கடுமையான பூகம்பம். தொடர்ந்து சுனாமியும் தாக்கியது. Magnitude 7.5 earthquake . Affected countries: Indonesia, Philippines, and Malaysia. 77 km from Palu City, Central Sulawesi, Indonesia · 28 Sep, 3:32 PM

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 10-09-2018

நாள்: 
Monday, September 10, 2018
 • உலகம் பாகிஸ்தான் பாகிஸ்தான் அதிபராக, ஆரிப் ஆல்வி நேற்று (09.09.2018) பதவியேற்றார்.
 • உலகம் நியூயார்க் தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று ஐ.நா., சபை அறிவித்துள்ளது.

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 06-09-2018

நாள்: 
Thursday, September 6, 2018
 • உலகம் விளையாட்டு தென்கொரியாவின் சாங்வான் நகரில் 52வது சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 10 .மீ., துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்க பதக்கமும், அர்ஜூன் சிங் சீமா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்
 • உலகம் ஜப்பான் ஜப்பானில் 'ஜெபி' புயல் தாக்கியதில் நிலச்சரிவு ஏற்பட்டு தேசமே உருக்குலைந்தது.
 • இந்தியா ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில் வாங்க முடிவு. உள்நாட்டில் புல்லட் ரயில்களை தயாரிக்கும் வகையில், அதற்கான தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு அளிப்பதாக ஒப்பந்தம்.

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 30-08-2018

நாள்: 
Thursday, August 30, 2018
 • இந்தோனேஷியா ஆசிய விளையாட்டு போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கப் பதக்கம் வென்றார்.
 • இந்தோனேஷியா விளையாட்டு ஆசிய விளையாட்டு போட்டி : 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. 400 மீ தொடர் ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பி.யு.சித்ரா வெண்கல பதக்கம் வென்றார்.
 • இந்தோனேஷியா விளையாட்டு மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமாபுனியா வெண்கலம் வென்றார்.

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 19-08-2018

நாள்: 
Sunday, August 19, 2018
 • இந்தியா நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன்மூலம் இத்திறன் படைத்த நாடுகளில் 6வதாக இந்தியா இணைந்துள்ளது. 10 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை, 750 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியாக தாக்கும் திறன் படைத்தது. இதனை எதிரி நாட்டு தடுப்பு ஏவுகணைகள் கண்டறிந்து தடுப்பது மிகவும் கடினம்.
 • உலகம் இந்தோனேஷியா இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவு மற்றும் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் சக்தி வய்ந்த நிலநடுக்கம். தலைநகர் ஜகார்தாவில் இருந்து, 1,500 கி.மீ.,லில் உள்ளது லோம்பாக் தீவு. இத் தீவின் கிழக்கு பகுதியில், நேற்று காலை, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில், 6.3 ஆக பதிவானது.

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 08-08-2018

நாள்: 
Wednesday, August 8, 2018
 • தமிழகம் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும்பியபடியே மெரினா கடற்கரையில் அண்ணாதுரை சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. .
 • இந்தியா புதுடில்லி தேசிய பங்குச் சந்தையின், வெள்ளி விழாவையொட்டி, இன்று(ஆக.,8) புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 07-08-2018

நாள்: 
Tuesday, August 7, 2018
 • தமிழகம்சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவர்கள், ( ஆக.,7) மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 95.
 • உலகம் ரஷ்யா ரஷ்ய சிறப்பு தூதரானார் ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் சீகல்

Pages