English

Tamil Swine flu / பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன‌

பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும்.

எச்1.என்1 சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது.

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்

அறிகுறிகள் வழமையான பருவகால சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அவற்றுள் பின்வருவன அடங்கும்: காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம். குறிப்பாக உடல் சூடாதல் - சுரம் (100.o F க்கு மேல்), தலைவலி, தசைவலி , உடல் பலவீனம், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். அவற்றுடன் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு என்பன சேரக்கூடும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்