எந்த‌ ஆண்டில் இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்பினை தொடங்கியது | Tamil GK

English

Tamil எந்த‌ ஆண்டில் இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்பினை தொடங்கியது

1959

இந்தியாவில் தொலைக்காட்சி சேவைகள் 1959 ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 ஆம் நாள், டெல்லியில் தொடங்கின. இது முதன்முதலாக கல்வி ஒளிபரப்பிற்காகத் தொடங்கப்பெற்றது. சின்னத்திரைகளின் நிகழ்ச்சிகள் 1980 முதலாக தொடங்கியது.

வழக்கமான தினசரி ஒளிபரப்பு, ஆல் இந்தியா ரேடியோவின் ஒரு பகுதியாக 1965 ஆம் ஆண்டு முதல் துவக்கமானது. பின்னர் தொலைக்காட்சி சேவை 1972 ம் ஆண்டு பம்பாய் (தற்போது மும்பை) மற்றும் அமிர்தசரஸ் ஆக நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1975 வரை, ஏழு இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவை இருந்தது.

முதன்முதலாக தேசிய ஒளிபரப்புச் சேவையை தூர்தர்சன் தொடங்கியதும் இதே கால கட்டமே ஆகும். இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு காப்பியங்களே முதன் முதலாக தொலைக்காட்சித் தொடர்களாக தயாரிக்கப்பட்டன. மேலும் இத்தொடர்கள் உலகில் அதிகமாக பார்க்கப்பெற்ற தொடர்களாகவும் புகழ் பெற்றிருந்தன. 1990கள் வரை அரசு தொலைக்காட்சி சேவைகள் மட்டுமே இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டு வந்தன

இதுபோன்ற‌ வினா விடைகள்