English

Tamil ஸ்ரீ

ஸ்ரீ என்றால் செல்வம், வணக்கத்துக்குரிய, பெருமதிப்புக்குரிய என்பதைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் (அ) எழுத்தாகும்.

ஸ்ரீ அல்லது சிறீ (ஆங்கிலம் - Sri, Shri ,Shre அல்லது Shree, தேவநாகரி - श्री, IAST ஒலிபெயர்ப்பு Śrī)

ஒரு பெயருக்கு முன்னர் எழுதப்படும் போது ஆங்கிலச் சொல்லான Mr. , தமிழ்ச்சொல்லான திரு. ஆகியவற்றுக்கு ஒத்து விளங்குகிறது. இந்துக் கடவுள்களைக் குறிக்கும் பண்புப் பெயராக "ஸ்ரீ " பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீ எனும் தனியெழுத்து செல்வத்தைக் குறிப்பதால் ஸ்ரீதேவி என்னும் பெயர்பெற்று விஷ்ணுவின் துணையும் செல்வத்துக்கான கடவுளுமான‌ இலட்சுமி தேவியையும் குறிக்கும். வளத்துக்கு உரிய கடவுளான பிள்ளையாரையும் ஸ்ரீ என்ற பெயர் குறிக்கும்.

புனிதத் தன்மை உள்ளதாக நம்பப்படுகிறவர்களின் (உதாரணம் : கடவுள்களின் பெயர்கள், உயரிய‌ மனிதர்கள் போன்று) பெயர்கள் முன்னும் ஸ்ரீ என்ற சொல் சேர்த்து அழைக்கப்படுகிறது.

இதுபோன்ற‌ வினா விடைகள்