English

Tamil தொலைநோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது

ஹான்ஸ் லிப்பெர்ரெ (Hans Lipperhey)

தொலைநோக்கியின் வரலாறு பற்றியறிய‌ கி.பி1600 களின் முற்பகுதிக்கு பின்னோக்கி செல்ல வேண்டும். பொதுவாக கலிலியோ கலிலிக்குத்தான் தொலைநோக்கி கண்டுபிடித்தத‌ற்கான‌ பெருமை, ஆனால் இந்த துல்லியமானது அல்ல.கலிலியோ கலிலி1609 இல் வானவியல் நோக்கத்திற்காக‌ தொலைநோக்கியினை முதன் முதலில் பயன்படுத்தினார் (இதனை நினைவுகூறும் விதத்தில் தற்போது வானவியல் சர்வதேச ஆண்டு கொண்டாடப்படுகிறது வருகிறது ‍[2009 ல் 400 ஆண்டுகளுக்கு முன்பு] ).

ஹான்ஸ் லிப்பெர்ரெயின் காப்புரிமை(patent) விண்ணப்பம் செப்டம்பர் 25, 1608 என‌ தேதியிடப்பட்டது. இந்நாள் வரையிலும் இதுவேதான் முதலில் விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமையாகக் கருதப்படுகிறது. ஆதலால் தொலைநோக்கி கண்டுபிடித்த பெருமை ஜெர்மன் டச்சு (German-Dutch) கண்ணாடி தயாரிப்பாளரான‌ ஹான்ஸ் லிப்பெர்ரெவை சாரும். இருப்பினும் இவர்தான் முதலில் கண்டுபிடித்தார் என்பது தெளிவாக தெரியவில்லை

இதுபோன்ற‌ வினா விடைகள்