English

Tamil விண்வெளிக்கு பயணித்த முதல் மனிதன் யார்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Gagarin)

யூரி ககாரின், விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் வீரராவார். மேலும் அவர் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் ஆவார். ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

ரஷ்யாவின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9,1934 இல் பிறந்த‌ இவர் மார்ச் 27, 1968 ல், தனது 34ஆம் வயதில் காலமானார்.

இதுபோன்ற‌ வினா விடைகள்