English

Tamil பனாரஸ் சேலை

பனாரசி சேலை (சாரி, saree) இந்தியாவின் வாரணாசி (Varanasi) நகரத்தில் நெய்யப்படும் ஆடை ஆகும். இச்சேலைகள் பட்டு நூற்களால் கோர்க்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன‌. இவ்வகைச் சேலைகள் இந்தியாவில் உற்பத்தியாகும் மிகச் சிறந்த‌ சேலைகளுள் ஒன்றாகும். பனாரஸ் சேலைகள்(Banarasi saris) தங்கம் மற்றும் வெள்ளியாலான‌ பட்டு ஜரிகை மற்றும் உயர்தர எம்பிராய்டரி வேலைகளுக்காக‌ பெயர்போனவை.

பனாரஸ் சேலைகள் நுணுக்கமான வடிவமைப்புடன் ந‌ன்றாகப் பின்னபட்டு, பலவகை வடிவங்களாகச் செதுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆகையால் இவை சிறிது எடை கூடுதலாக‌ கனமாக‌ இருக்கும். ஒரு பனாரஸ் சேலை நெய்வதற்கு கிட்டத்தட்ட‌ இரு மாதங்களாகும்.

இந்த சேலைகள் எந்த ஒரு இந்தியப் பெண்ணும் தன்னுடைய‌ திருமணத்தின் போது மணப்பெண் உடையாக அணிய‌ ஆவல் கொள்ளும் எண்ணம் தவிர்க்க முடியாத தருணமாக‌ இருக்கும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்