English

Tamil Immunity என்றால் என்ன‌

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி (IMMUNITY) என்பது உடலில் தொற்று, நோய், அல்லது மற்றும் தேவையற்ற உயிரியல் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க போதுமான பாதுகாப்பு திறன் கொண்ட உடல் நிலை / அமைப்பு ஆகும். இச்சக்தியானது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் உள்நுழைவதை எதிர்க்கும் உடல் திறன் ஆகும்.நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடா வகை என‌ இருகூறுகளை உள்ளடக்கியது.

குறிப்பிட முடியாத‌ திறனானது பல்வேறு வகையான‌ நோய்களை / நுண்ணுயிர்களை எதிர்க்கும் பாதுகாப்பு அரணாக‌ (அ) நோயினை முற்றுவிக்கும் வகை. இவ்வகை எதிர்ப்பு சக்தி ஆன்டிஜெனை (எதிர்ச்செனியை) சாராததாகும். குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒவ்வொரு நோய்க்கேற்ப‌ தனியான‌ எதிப்பு சக்தியினை உடலினுள் உருவாக்கி ஒவ்வொருவிதமான‌ நுண்ணுயிரிக்கும் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதாகும்.

உதாரணமாக‌ எய்ட்ஸ் நோய் கிருமிகள் / வைரஸ்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி திறனை கொஞ்சம்கொஞ்சமாக‌ தகர்க்கிறது. சில‌ ஆண்டுகளுக்குப்பின் இவ்வைரஸ்கள் உடலின் முக்கிய‌ உறுப்புகளை பணிமுடக்கம் செய்து மரணத்தினை ஏற்படுத்தும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்