English

Tamil மியூசுவல் ஃபண்ட்ஸ்

ஷேர் மார்கெட்டில் தனி நபராக‌ ஈடுபடாது, பெரிய நிறுவனங்கள் வழியாகப் பணத்தினைக் கொடுத்து முதலீடு (Invest - இன்வெஸ்ட்) செய்வதாகும். எந்த‌ ஷேரை வாங்க‌ வேண்டும், கூடாது என‌ அந்த‌ நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும்.

மியூசுவல் ஃபண்ட்ஸில் சில‌ திட்டங்கள் உள்ளன‌. அவை அதிக‌ ரிஸ்க் உள்ள‌ திட்டங்களும், அதிக‌ ரிஸ்க் இல்லாத‌ திட்டங்களும் ஆகும். அதிக‌ ரிஸ்க் இல்லாத‌ திட்டங்களில் லாபம் குறைவாக‌ இருக்கும்.

மியூசுவல் ஃபண்ட் என்பது தமிழில் பரஸ்பர‌ நிதி எனப்படுகிறது. பங்குச் சந்தைப் (share market -ஷேர் மார்க்கெட்) போன்ற‌ மியூசுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்ய‌ பங்குச் சந்தைப் பற்றி அறிந்திருக்க‌ வேண்டிய‌ அவசியம் இல்லை, ஏனெனில் முதலீடு செய்யும் நிறுவனம் அதனை பார்த்துக்கொள்ளும்.

மியூசுவல் ஃபண்டை ஒரு நிறுவனமாக‌ எடுத்துக் கொண்டால், நம்மைப்போன்ற‌ பல‌ முதலீட்டாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து முதலீட்டாளர்களிடமும் பெற்றுக்கொண்ட‌ தொகையினை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த‌ தொகைக்கேற்ப‌ யூனிட்ஸ்கள் (Units) எனப்படும் அலகுகள் வழங்கப்படும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்