English

Tamil அபிமன்யு வதத்திற்கு யார் காரணம் ?

ஜயத்திரதன் (Jayadratha)

அபிமன்யு வதத்திற்கு யார் காரணம் ?., ஆம் ஜயத்திரதன் தான்.

குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாளில் கௌரவர்கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று போர் புரிந்த அபிமன்யுவிற்கு சக்கரவியூகத்தினை உடைத்து உள்ளே செல்லத் தெரியுமே ஒளிய‌ அதனுள்ளிருந்து வெளியே வரத் தெரியாது. சக்கரவியூகத்தினை உடைத்து உள்ளே செல்லும் போது பின்வரும் மாகாரதர்களான‌ தர்மன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர்கள் தனக்கு உதவியாக‌ முன்னேறிக்கொண்டிருப்பார்கள் என்பதே திட்டம். ஆனால் ஜயத்திரதன் பெற்ற‌ வரம் அபிமன்யு வதத்திற்கு காரணமானது.

ஜயத்திரதன் சிவபெருமானிடம் கேட்ட‌ வரம் யாதெனில், நான் பாண்டவர் ஐவரையும் வென்றுவிட‌ வேண்டுமென்று. ஆனால் கிடைத்ததோ, அர்ச்சுனன் தவிர்த்து மற்றவர்களை ஒருனாள் போரில் வெற்றிகொள்ளலாம் என்பதே. இவ்வரம் அன்று அவனுக்கு கை கொடுத்தது.

இதுபோன்ற‌ வினா விடைகள்