English

Tamil நரேந்திர மோதி

நரேந்திர மோதி குசராத்து மாநிலத்தில் அக்டோபர் 7, 2001 இல் இருந்து முதல்வராக பதவி வகித்து வரும் அரசியல்வாதியாகும். இவரது முழுப்பெயர் நரேந்திர‌ தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī) என்பதாகும். இவர் பரவலாக நரேந்திர மோடி என்றழைக்கப்படுகிறார். இவர் செப்டம்பர் 17, 1950 ஆண்டு குசராத்தில் பிறந்தார். நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7, 2001 இல் இருந்து குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

நரேந்திர மோதி நடுத்தரக் (பொருளாதார வசதிபடைத்த) குடும்பத்தில் வடநகர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் தனது பெற்றோர்களான‌ தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் ஃகீரபேன்னுக்கும் பிறந்த மூன்றாவது குழந்தையாகும். இவர் குழந்தை பருவத்திலிருந்தே ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார். நரேந்திர மோதி இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார்.

அப்போதைய குசராத் முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர மோதி வெற்றிபெற்று அக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வராக‌ பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ள முதல்வராவார் நரேந்திர‌ மோதி.


இதுபோன்ற‌ வினா விடைகள்