English

Tamil கைலாஷ் சத்தியார்த்தி

பார்க்கவும்

Who is Kailash Satyarthi, கைலாஷ் சத்யார்த்தி யார்?.

Kailash Satyarthi (Hindi: कैलाश सत्यार्थी) யார்?. கைலாஷ் சத்யார்த்தி இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் 2014ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வாகையாளரும் ஆவார். 1990களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாகப் பணியில் அமர்த்தப்படுவதை எதிர்த்துப் போராடி வருகிறார். இவரது அமைப்பான‌ " பச்பன் பச்சாவ் அந்தோலன்", 80,000கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப்பணிகளிலிருந்து தடுத்து அவர்களின் மீள்வாழ்வு, மீளிணைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.

கைலாசு சத்யார்த்தி 1954-ஆம் ஆண்டில் 11 ஜனவரி, மத்தியப்பிரதேச மாநிலத்தில், விதிஷா மாவட்டத்தில் பிறந்தார். இவர் தந்தை காவலர் ஆவார், அவர் கைலாசு சிறுவயதாக உள்ள போதே மரணமடைந்து விட்டார்.

சிறுவர்களின் சமூகச் சிக்கல்களுக்காக உலகளவில் சத்தியார்த்தி போராடினார். சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான உலகளாவிய அணிவகுப்பில் (Global March Against Child Labor) பங்கேற்றார்.உலகளவிலான தன்னார்வல அமைப்புகள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்களின் கூட்டணியான இதன் பன்னாட்டு பரிந்துரைப்பு சிறுவர் தொழிலாளர் மற்றும் கல்விக்கான அமைப்பான பன்னாட்டு மையத்தில் (ICCLE) இணைந்து பணியாற்றினார். தெற்கு ஆசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது தயாரிக்கப்பட்ட கம்பளங்களை தரம் காட்டவும் கட்டுப்படுத்தவும் ரக்மார்க்கு என்ற முதல் சுயச்சான்றிதழை அறிமுகப்படுத்தினார். (இது தற்போது குட் வீவ் எனப்படுகிறது). பின்னர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இத்தகைய சான்றிதழ் கொண்ட கம்பளங்களையே வாங்க 1980களிலும் 1990களிலும் பரப்புரை ஆற்றினார்.

அக்டோபர் 10, 2014 ல் கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். இவர் இப்பரிசினை பாகிஸ்தானின் மலாலா யூசப்சையி உடன் பரிசை பகிர்ந்துகொண்டார்


மேலும் கைலாஷ் சத்யார்த்தி பற்றி அறிய‌ :
http://en.wikipedia.org/wiki/Kailash_Satyarthi
http://www.kailashsatyarthi.net/
https://twitter.com/k_satyarthi

இதுபோன்ற‌ வினா விடைகள்