English

Tamil CIN எண் (CIN No) என்றால் என்ன?

நிறுவன அடையாள எண்

CIN எண் என்றால் என்ன?.

ஒரு நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்யப்படும்போது அந்நிறுவனத்திற்கான‌ ''நிறுவன அடையாள எண்" பதிவு செய்யப்படும் மாநிலத்தின் Registrar of Companies (ROCs) ஆல் ஓதுக்கப்படும். அது பொது நிறுவனமாகட்டும் (பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத) அல்லது ஒரு தனியார் நிறுவனமாகட்டும் அல்லது இந்தியாவில் வணிக‌ மையம் கொண்ட‌ ஒரு வெளிநாட்டு நிறுவனமாகட்டும் ; அவற்றிற்கான‌ ஒரு தனித்த 21 இலக்க‌ அடையாள எண் ஒதுக்கப்படும் பின்னர் அவ்வெண் மூலம் அடையாளம் காணப்படும்.

பதிவுசெய்யப்பட்ட‌ பின்னர் Registrar of Companies (ROCs) அந்நிறுவனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட‌ பெயர் மற்றும் ''நிறுவன அடையாள எண்" அடங்கிய‌ சான்றிதழ் ஒன்றினை வழங்குகின்றது.

ஒவ்வொரு நிறுவனமும் அதன் கடிதம் அல்லது தரவு ப‌டிவங்களில், குறிப்பாக தணிக்கைகள் மற்றும் அறிக்கைகள் போன்றவறினை Ministry of Corporate Affairs (MCA) க்கு சமர்ப்பிக்கும் போதெல்லாம் இந்த தனிப்பட்ட நிறுவன என்ணினை மேற்கோள் காட்ட‌ வேண்டும்.


இதுபோன்ற‌ வினா விடைகள்