English

Tamil Vice President

ஒரு நிறுவனத்தில் Vice President என‌ சொல்லப்படும் நபர் யார்?

வி.பி.(துணைத் தலைவர்) என்பவர் ஒரு நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் கீழே அதிகாரத்தில் இருக்கும் ஒரு அதிகாரியாகும். லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட‌ "வைஸ் (vice)" எனும் சொல்லின் பொருள் "அவர் இடத்தில் ('in place of) என்பதாகும். தினசரி அன்றாட‌ வழக்கில் துணைத் தலைவர், சுருக்கமாக‌ வி.பி. (VP) என‌ அழைக்கப்படுவர்.

தொழில்துறையில், "துணை தலைவர் (VP)" என்பது நிர்வாக‌ மேலாண்மையில் தகுந்த அந்தஸ்தை (அ) நிலையைக் குறிக்கிறது. ஒரு நிறுவனம் தனது பல்வகைப்பட்ட‌ உற்பத்திபொருட்கள் (அ) வணிகப் பிரிவினைப் பொறுப்பேற்று நடத்தவும் அல்லது செயல்பாடுகளை கவனிக்கவும் ஒவ்வொரு பிரிவுக்குமாக‌ பல‌ துணைத் தலைவர்களை (Vice President) (எ.கா. நிதி துணைத் தலைவர், அல்லது பணியமர்த்தல் பொறுப்பான துணை தலைவர்) நியமனம் செய்யலாம்.

ஒரு துணைத் தலைவர் (VP) வழக்கமாக நிறுவனத்தின் தலைவர் (president/MD) அல்லது தலைமை நிர்வாக அதிகாரியிடம் நேரடியாக செயல்பாடுகள் (அ) நடவடிக்கைகளை தெரிவித்துக்கொள்வார்.

இதுபோன்ற‌ வினா விடைகள்