English

Tamil Unmanned Aerial Vehicle - UAV

ஆளில்லாமல் தானே இயங்கும்(unpiloted aerial vehicle) வானூர்தியாகும்.

ஆளில்லாத வானூர்தி

தானியங்கி வானூர்தி (Unmanned Aerial Vehicle - UAV) என்பது ஆளில்லாமல் தானே இயங்கும்(unpiloted aerial vehicle) வானூர்தியாகும். இவை ராணுவத்தில் உளவுபார்க்கும் பணிகளுக்காக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

தானியங்கி வானூர்தி சுயமாக‌ இயங்கி கட்டுப்படுத்தும் திறன்கொண்டவையும் (அ) மனிதனால் (விமானியால்) கட்டுப்படுத்தப்படும் திறன் கொண்டவையும் ஆகும். இவை தளராது பறக்கக்கூடிய எந்திரம் கொண்டவை. இவை வானூர்திகள் போலல்லாது, தானே ஆயுதமாக மாறி அழிக்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டவை. தானாகவோ அல்லது தொலைவிலிருந்தோ இயக்கப்பட்டாலும், இவற்றை திரும்ப பயன்படுத்த இயலாது (ஏனெனில் இவை சுயமாக‌ அழிந்துவிடும் (அ) எதிரிகளால் அழிக்கப்பட்டுவிடும் ). தானியங்கி வானூர்திகள் (UAV) வடிவங்கள், அளவுகள், சிறப்பம்சம்களால் ஒவ்வொன்றும் மாறுபடும். தானியங்கி வானூர்திகளை அவற்றின் செயல்பாடுகளால் இரு வகையாகப் பிரிக்கலாம். தொலைவிலிருந்து தொலைத்தொடர்பு மூலம் இயக்கப்படும்(remotely piloted aircraft (RPA)) வானூர்திகள் மற்றும் தானாகவே மென்பொருள் நிரல்களால் கட்டுப்படுத்தப்படும் வானூர்திகள் ஆகும்.

தானியங்கி வானூர்திகள் ஆறு வகைப்படும்:

1. குறிப்பார்த்து இலக்கைத் தாக்கும் தானியங்கி வானூர்தி
2. போர்க்களத்தில் வியூகம் வகுக்கும் உளவு விமானம்.
3. அபாயகரமான போர் தாக்குதலுக்கான‌ போர் விமானம்.
4. போக்குவரத்து விமானம்.
5. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி.
6. வர்த்தகம் மற்றும் படைத்துறை சாராத பணிகளுக்கான‌ விமானம்.

இதுபோன்ற‌ வினா விடைகள்