English
What is Bonsai ?

Tamil Bonsai

தட்டையான‌ மரம்.

ஜப்பானிய மொழியில் 'பொன்' என்றால் தட்டையான கொள்கலன் என்றும் 'சாய்' என்றால் மரம் என்றும் பொருள்படுகின்றன. தட்டையான கொள்கலன் ஒன்றில் அதிக உயரமில்லாமல் குட்டையாக மரங்களை வளர்க்கும் ஒரு விசேஷமான‌ கலையே பொன்சாய். பொன்சாய் எனப்படுவது இயற்கையில் குறை வளர்ச்சியுடைய தாவரங்கள் என‌ அர்த்தம் கொள்ளக்கூடாது, மாறாக‌ மிகப் பெரிதாக வளரக்கூடிய மரங்களை குட்டையாக வளர்க்கும் நுட்பம் எனக் கொள்ளவேண்டும்.

சுமார் 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்' என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது.சீனாவின் அரச தூதுவர்கள் இந்தக் கலையை ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தினர் என‌ வரலாறு கூறுகிறது. ஜப்பானின் சென் பௌத்த துறவிகள் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தியானமுறையாக பொன்சாய்களை வளர்க்கத் தொடங்கினர். நாளடைவில் ஜப்பானியர்கள் பல்வேறு விதமான நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதால் இன்று பொன்சாய் ஒரு கலையாக உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்துள்ளது.

சிறிய இலைகள் பருமனான தண்டு குறுகலான வடிவம் கொண்ட மரங்களே பென்சாய்களாகத் தெரிவு செய்யப்படுகின்றன. அழகிய கவர்ச்சியான பொன்சாய்கள் சிறந்த வடிவமைப்பைக்கொண்டவை. ஒரு பொன்சாயை விதையிலிருந்தும்இ சிறிய மரத்திலிருந்தும் அல்லது தண்டிலிருந்தும் ஆரம்பிக்கலாம். சிறிய மரத்தை பொன்சாயாக மாற்றுவதற்கே இன்று பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும் அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உரிய அளவுக்கு வளரவிடாது. முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும் பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும். ஜப்பானிய மொழியில் இது 'தட்டத் தோட்டம்') எனப் பொருள்படும். சீனக் கலையான 'பென்ஜிங்' என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் கலை வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

இதுபோன்ற‌ வினா விடைகள்