தங்கம் பூமியில் தோன்றியது எப்படி? | Objective GK

தங்கம் பூமியில் தோன்றியது எப்படி?

அறிவியல் கூறுவது யாதெனில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரியக் குடும்பம் உருவானது. அதற்கு முன்னரே பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் நோவா மற்றும் நட்சத்திர மோதல்கள் உண்டாகின‌. இந்த மோதல்களின் அடிப்படையில் தங்கம் உருவாகியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை முறையே உற்பத்தி செய்கின்றன. இந்த வரிசையில், ஒரு கட்டத்தில் ஒரு நட்சத்திரத்தின் மையம் இரும்பு அணுக்களால் நிரம்பும்போது, இரும்பின் இறுக்கம் காரணமாக நட்சத்திரத்தின் இயக்கம் நிலைகுலைந்து மொத்த நட்சத்திரமும் வெடித்துச் சிதறுகிறது.

'சூப்பர்நோவா' என அறியப்படும் இந்த மாபெரும் நட்சத்திர வெடிப்பில் ஏற்படும் வினையின் மிச்ச எச்சமாகக் கிடைப்பதுதான் நாம் விலை உயர்ந்த‌ உலோகமாகக் கருதும் தங்கம். இது பூமியில் மட்டுமல்லாமல், அண்டம் முழுவதும் உள்ள பல கிரகங்கள் மற்றும் பால்வெளியில் தாறுமாறாக‌ சுற்றித்திரியும் பல விண்கற்களிலும் கூட தங்கம் உள்ளிட்ட பிற தனிமங்கள் இருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகள் கருத்தாகும்.