English CBFC
Tamil CBFC
Central Board of Film Certification. இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு
Central Board of Film Certification
திரைப்படத்தில் ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் மீறாத வகையில் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் மற்றும் நடிப்பவர்களின் அசைவுகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவும், 1952 ஆம் ஆண்டில் திரைப்படத் தணிக்கைச் சட்டமும் அமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பின்வரும் சான்றிதழ்களை வழங்குகிறது
சான்றிதழ் பெயர் |
விளக்கம் |
U | இந்தியா முழுவதும் கட்டுப்பாடற்ற பொது பார்வைக்காக, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இந்த பிரிவின் கீழ் படங்களில் கல்வி, சமூகம் அல்லது குடும்பம் சார்ந்த கருப்பொருள்களை கொண்டிருக்கலாம். இந்த பிரிவின் கீழ் படங்களில் கற்பனை வன்முறை மற்றும் / அல்லது லேசான மோசமான மொழி கொண்டிருக்கலாம். |
UA | அனைத்து வயதினருக்கும் ஏற்றது , இருப்பினும் 12 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் பெற்றோர்களுடன் சேர்ந்து பார்த்து கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் திரப்படங்கள் முதிர்ந்த கருப்பொருள்கள், பாலியல் குறிப்புகள், லேசான செக்ஸ் காட்சிகளை, குறுகிய அவலப்பட்டங்களை மற்றும் / அல்லது கொச்சையான மொழி இடைக்கிடை பயன்படுத்தி வன்முறை கொண்டிருக்கலாம். |
A | வயது முதிர்ந்தவரின் பார்வைக்கு மட்டுமே (18 வயது அல்லது அதற்கு மேல்). 18 வயதுக்கு கீழ் யாரும் A-மதிப்பிடப்பட்ட டிவிடி, VHS, UMD வாடகைக்கு அல்லது இந்த மதிப்பீடு பெற்ற சினிமாவை பார்க்க / வாங்க அனுமதி யில்லை. |
S | இந்த மதிப்பீடு பெற்ற திரைப்படம் சிறப்பு பார்வையாளர்களுக்கு மட்டுமே என பொருள் குறிக்கிறது.மருத்துவர்கள் போன்றவர்களுக்கு |